வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் கையிருப்பில் உள்ளத் தொகை எவ்வளவு, கடைசிப் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொலைப்பேசி மூலம் அறிந்துகொள்ளும் வசதியை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கையிருப்பு குறித்த விபரத்தை அறிய உங்கள் போனில் இணையவசதி இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.
இலவச எண் (Free number)
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. இந்த வரிசையில், எஸ்பிஐ (SBI Bnak)1800 1234 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது, இதில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
அனைத்து வேலைகளும் ஒரு எண்ணில் இருந்து செய்யப்படும்
இந்த இலவச எண்ணை அழைத்தால், உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடந்த கால பரிவர்த்தனை விவரங்களைப் பெறலாம். அதாவது, இந்த ஒரு எண்ணில் இருந்து உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் போனில் இணையதளவசதி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
புதிய வசதி (New facility)
கொரோனா போன்று வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாட்களில் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே பாதுகாப்ப இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக SBI தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களே, வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற அடிப்படையில், உங்கள் உடனடி வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தொடர்பு இல்லாத சேவையை SBI வழங்குகிறது. எங்கள் இலவச எண்ணை 1800 1234க்கு அழைக்கவும்' என்று தெரிவித்துள்ளது.
சேவைகள் (Services)
-
எஸ்பிஐயின் இந்த இலவச எண் மூலம் உங்கள் வங்கி (SBI Bnak) இருப்பைச் சரிபார்க்கலாம்.
-
இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம், உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
-
எஸ்பிஐயின் இலவச எண்ணான 1800 1234க்கு மெசேஜ் செய்வதன் மூலம் உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவலையும் பெறலாம்.
-
இந்த இலவச எண்ணில் உங்கள் ஏடிஎம் கார்டைத் தடுக்கலாம்.
-
இந்த இலவச எண்ணைத் தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
இந்த இலவச எண் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் ஏடிஎம் கார்டின் பின் எண்ணை (Pin Number) உருவாக்கலாம்.
-
இந்தக் கட்டணமில்லா எண்ணில் இருந்து உங்கள் ஏடிஎம் கார்டை (ATM Card) முடக்கிய பிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
-
இந்த வசதிகளை இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் பெறலாம், அல்லது குறுஞ்செய்தி அனுப்பியும் பெறலாம்.
மேலும் படிக்க...
Share your comments