பழனி முருகன் கோயிலில் காலியாக உள்ள 10க்கும் மேற்பட்டப் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
சித்த மருத்துவர் (Medical Officer – Siddha)
காலியிடங்கள் : 3
கல்வித் தகுதி (Educational Qualification)
தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் (MD) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 50,000
செவிலியர் (Staff Nurse)
காலியிடங்கள் : 5
கல்வித் தகுதி (Educational Qualification)
செவிலியர் பட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் (B.Sc Nursing) பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 12,000
மருந்தாளுனர் – சித்தா (Pharmacist – Siddha)
காலியிடங்கள்: 3
கல்வித் தகுதி (Educational Qualification)
சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 15,000
பாதுகாவலர்
காலியிடங்கள் : 4
கல்வித் தகுதி (Educational Qualification)
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 8,000
சுகாதாரப் பணியாளர்
காலியிடங்கள் : 4
கல்வித் தகுதி (Educational Qualification)
தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 8,000
வயதுத் தகுதி (Age Limit)
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி (Address)
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.
கடைசி தேதி (Last date)
31.03.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
மேலும் படிக்க...
Share your comments