1. மற்றவை

PAN Card: எந்த ஆவணமும் கொடுக்காமல் பான் அட்டை!

T. Vigneshwaran
T. Vigneshwaran
PAN Card without any document

 PAN அட்டை 10 இலக்க ஆல்ஃபா நியூமெரிக் PAN எண்ணுடன் வரும் மிக முக்கியமான ஆவணம். இது பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கிய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது.

பான் அட்டை ஒரு முக்கியமான ஆவணம். இப்போது பயனர்கள் இலவசமாக பான் அட்டையை பெறலாம். ஆனால், இது ஒரு முக்கிய ஆவணம் என்பதால், ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டைப் பெற முடியும். உடனடி PAN வெளியீடு ஆதார் அடிப்படையிலான eKYC பயன்பாட்டை உள்ளடக்கியது.

புதிய வருமான வரி இணையதளத்திற்கு செல்லவும். 'Instant PAN'-க்கு செல்ல வேண்டும்.

  • இந்த வசதி இ-பான்-ஐ ரியல் டைம் அடிப்படையில் அளிக்கிறது. இது PDF வடிவத்தில் வருகிறது.
  • பின்னர் 'Get new E-PAN'-ஐக் கிளிக் செய்ய வேணும்.
  • அதன்பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, 'நான் அதை உறுதிப்படுத்துகிறேன்' என்ற செக் பாக்ஸை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் வருமான வரித்துறை சில விஷயங்களில் உங்கள் பதில்களைக் கேட்கும்.
  1. எனக்கு இதற்கு முன்னர் PAN அளிக்கப்பட்டதில்லை.
  2. எனது செயலில் உள்ள மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
  3. எனது பிறப்பு விவரங்கள் முழுவதும் ஆதார்-இல் உள்ளன.
  4. PAN விண்ணப்ப தேதியின்படி நான் மைனர் அல்ல.

இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டவுடன், 15 இலக்க ஒப்புதல் எண் உருவாக்கப்படும்.

பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட இ-மைலுக்கு அது அனுப்பப்படும்.

How to check the status of instant PAN application:உடனடி PAN விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு சரிபார்ப்பது

உங்கள் பான் கோரிக்கையின் நிலையை கண்காணிக்க acknowledgment number பயன்படுத்த வேண்டும். 'Instant PAN through Aadhaar' என்ற இணைப்பை தேர்வு செய்து, பின்னர் 'Check Status of PAN' -ஐ கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு குறிப்பிடப்பட்ட இடத்தில் ஆதார் எண்ணை சமர்ப்பித்து, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ சமர்ப்பிக்கவும். கடைசியாக, PAN விண்ணப்பத்தின் நிலையை சரிப்பார்களாம்.

மேலும் படிக்க:

இறந்தவர்களின் ஆதார்-பான், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை என்ன செய்வது?

PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!

English Summary: PAN Card: PAN Card without giving any document! Published on: 13 September 2021, 05:35 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.