1. மற்றவை

செலுத்துவது ரூ.12 - கிடைப்பது ரூ.2 லட்சம் ! விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Paying Rs 12 - Available Rs 2 lakh! Details inside!

கொரோனா போன்ற நோய்கள் மனித உயிர்களை துவம்சம் செய்தக் காலங்கள்தான், காப்பீடு செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது. அந்த வகையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 12 ரூபாய் கொடுத்தாலே 2 லட்சம் ரூபாய்க்கானக் காப்பீடு கிடைக்கும்.

எதுவும் நிரந்தரம் இல்லாத, இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில், காப்பீடு என்பது அனைவருக்குமேத் தேவையான ஒன்று. எதிர்பார்க்காத நேரத்தில், ஏதாவது நிகழ்ந்துவிட்டால், அந்த சமயத்தில், நமக்குக் கைகொடுப்பது காப்பீடு. எனவே நமக்கும் நாம் நேசிக்கும் நமது குடும்பத்தினருக்கும் காப்பீடு செய்துகொள்வது மிக மிக அவசியம்.

காப்பீட்டுத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY). இத்திட்டத்தின் கீழ், 12 ரூபாய் செலவழித்து 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் தொகையாக 12 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

தகுதி (Qualification)

  • 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

  • வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.

  • இத்திட்டத்தின் காப்பீட்டு காலம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும்.

  • நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலமாகவே இந்தத் திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

  • இது தவிர, அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது பிற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தோ இதற்கான பாலிசியை வாங்கலாம்.

  • பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு, விபத்து ஏற்பட்ட 30 நாட்களுக்குள் கிளைம் செய்ய வேண்டும்.

  • இந்தக் கோரிக்கை அதிகபட்சம் 60 நாட்களில் தீர்க்கப்படும்.

  • இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற மே 31 வரை உங்கள் கணக்கில் போதுமான இருப்புத் தொகை இருக்க வேண்டும்.

  • இந்த பிரீமியம் தொகை தானாகவே வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.


சலுகைகள் (Discounts)

எதிர்பாராத விதமாக, பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது நாமினிக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும். விபத்தில், இரண்டு கண்கள் அல்லது இரண்டு கைகளையும் முழுமையாக இழந்தாலோ அல்லது இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டாலோ அல்லது ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் செயல்படாமல் இருந்தாலோ பாலிசிதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
பாலிசிதாரருக்கு விபத்தில் ஒரு கண்ணின் பார்வை அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் செயலிழந்தால் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

பிரீமியம் தொகையைப் பொறுத்தவரையில், பாலிசியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கில் போதுமான தொகை இல்லாமலோ அல்லது பாலிசிதாரர் கணக்கை மூடிவிட்டாலோ, காப்பீடு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.காப்பீடு செய்தவரின் காப்பீடு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளால் மூடப்பட்டு, பிரீமியம் தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்தால் கவனக்குறைவாகப் பெறப்பட்டால் காப்பீட்டு தொகை ஒரு கணக்கில் மட்டுமே கிடைக்கும்.

மேலும் படிக்க...

வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?

கர்ப்பிணிகளுக்கு மீன் நல்லதா? ஆய்வில் கண்டுபிடிப்பு!



English Summary: Paying Rs 12 - Available Rs 2 lakh! Details inside! Published on: 24 April 2022, 09:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.