அரசு ஊழியர்களின் பெண் குழந்தைகளுக்கும் இனி ஓய்வூதியம் கிடைக்க வகை செய்ய ஏதுவாக, குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சலுகைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதன்படி,7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2022 ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
விதிகளில் மாற்றம் (Change in rules)
இந்நிலையில் தற்போது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான விதிமுறையில் மாற்றப்பட்டுள்ளது.இதன்படி, சிசிஎஸ் பென்சன் 1972 விதி 54(11)ன் படி, கணவன்-மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு (கணவன் அல்லது மனைவி) குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்துவிட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
தகுதி (Qualification)
மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. இதற்கான விதிமுறையின்படி, கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்கள் மத்திய குடிமைப் பணிகள் ஓய்வூதியம் (CCS pension) 1972-இன் கீழ் வருபவர்களாக இருந்தால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியைப் பெறுவார்கள்.
ஓய்வுக்குப் பிறகு இருவரும் இறந்துவிட்டால், அவர்களின் குழந்தைகள் (நாமினிகள்) இரண்டு ஓய்வூதியம் தொகை பெறலாம். இந்த இரண்டு ஓய்வூதியத் தொகையும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சமாக இருக்க வேண்டும்.
குறைவான ஓய்வூதியம் (Less pension)
இதற்கு முன்னர் அரசு ஊழியர் இறந்துவிட்டால், உயிருடன் இருக்கும் அவரது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.45,000 மட்டுமே கிடைத்தது. இது ஓய்வூதிய விதி 54 (3)-இன் கீழ் உள்ள விதிமுறையாகும். இரண்டு குடும்ப ஓய்வூதியங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால் துணை விதி (2)-இன் படி, இந்தத் தொகை ரூ.27,000 ஆக இருந்திருக்கும்.
புதிய விதி (New rule)
7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அதிகபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, பணி ஓய்வுக்கு பின் இருவரும் இறந்துவிட்டால், நாமினி குழந்தைகளுக்கு ஓய்வூதியமாக, ரூ.1.25 லட்சமும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.75,000 வழங்கப்படும்.
மேலும் படிக்க...
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!
Share your comments