பென்சனர்களுக்கு அகவிலை நிவாரணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சில மாதங்களாக எதிர்பார்த்திருந்த இந்த தொகை தற்போது அரசு ஊழியர்களுக்கு வந்து சேர இருக்கிறது.
அரசு ஊழியர்களில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு மட்டும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
யாருக்கெல்லாம் உயரும்?
1960ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி முதல் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியில் இருந்து ஓய்வுபெற்ற சிபிஎஃப் (Central Provident Fund - CPF) பயனாளிகளுக்கான அகவிலை நிவாரணம் அடிப்படை நிவாரணத் தொகையில் (basic ex-gratia) 368 விழுக்காட்டில் இருந்து 381 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
எவ்வளவு உயர்வு?
மேற்கூறியபடி 1960 நவம்பர் 18 முதல் 1985 டிசம்பர் 31 வரை பணியில் இருந்து ஓய்வுபெற்ற சிபிஎஃப் பயனாளிகளுக்கு அடிப்படை நிவாரணத் தொகை A பிரிவினருக்கு 3000 ரூபாய், B பிரிவினருக்கு 1000 ரூபாய், C பிரிவினருக்கு 750 ரூபாய், D பிரிவினருக்கு 650 ரூபாய் என வழங்கப்படும். இவர்களுக்கு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலை நிவாரணம் 368 விழுக்காட்டில் இருந்து 381 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
கீழ்காணும் சிபிஎஃப் பயனாளிகளுக்கு 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலை நிவாரணம் 360 விழுக்காட்டில் இருந்து 373 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 1986 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பணியில் இருந்த சிபிஎஃப் பயனாளிகள் இறந்துவிட்டால் அவரது கணவன்/மனைவி மற்றும் குழந்தைகள். 1960 நவம்பர் 18ஆம் தேதிக்கு முன் சிபிஎஃப் பயன்களுடன் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணத் தொகை 654 ரூபாய், 659 ரூபாய், 703 ரூபாய் மற்றும் 965 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளின் பொறுப்பு
பென்சன் வாங்குவோருக்கு எவ்வளவு அகவிலை நிவாரணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை கணக்கிட வேண்டியது வங்கிகள் உள்பட பென்சன் விநியோகிக்கும் நிறுவனங்களின் பொறுப்பாகும்.
எனவே இந்த ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு வரும் கூடுதல் தொகையை செலவிட இப்போதேத் திட்டமிடலாம்.
மேலும் படிக்க...
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
Share your comments