மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தபால் அலுவலகம் மூலம் பல சேமிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ரெக்கரிங் டெபாசிட்(Recurring Deposit)
ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தற்போது 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் எந்த முதலீட்டாளரும் குறைந்தபட்சம் மாதம் ரூ.100 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.
இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். பெரியவர்கள், கூட்டுக் கணக்கு (மூன்று பெரியவர்கள் வரை), மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர்கள் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் ஆகியோர் தங்கள் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கணக்கு தொடங்கி ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் பயனடையலாம்.
கடன் வசதி (Loan Facility)
தபால் அலுவலகத்தில் திறக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். இந்த திட்டத்தில் ஐந்து வருடங்கள் அதாவது 60 மாதங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஒருவேளை ரெக்கரிங் டெபாசிட் திட்ட கணக்கை மூட விரும்பினால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மூடலாம். தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் கீழ் கடன் பெறும் வசதியும் உள்ளது. இதுபோன்ற நிறைய அம்சங்களும் சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளன.
தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பான முறையில் இருப்பதோடு சிறந்த வருவாயையும் தரும். இதனால் நிறையப் பேர் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம்: UIDAI முக்கிய அறிவிப்பு!
அதிகரித்துள்ள போலி ரேஷன் கார்டுகள்: மொத்தம் எவ்வளவு தெரியுமா?
Share your comments