1. மற்றவை

Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Postal Savings Scheme

இந்தியாவில் சிறிய தொகையொன்றை முதலீடு செய்வதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பணம் வருமானமாக ஈட்டிக்கொள்ள திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Post Office PPF Scheme 2022 என இந்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாள்தோறும் 417 ரூபா வைப்புச் செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் ஊடாக ஒரு கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலக சேமிப்பு (Post Office Savings)

இந்தியாவில் மத்தியதர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பாக முதலீடு செய்யக் கூடிய ஓர் இடமாக தபால் நிலையங்கள் காணப்படுகின்றன. சிறிய தொகை பணத்தை மட்டும் வைப்பிலிட்டாலும் பெருந்தொகை லாபத்தை அடையக்கூடிய சாத்தியம் இந்த திட்டத்தில் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டம் பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாக கருதப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட கணக்குகளை உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதங்கள் மாற்றப்பட்டாலும் அது முதலீட்டாளர்களை பாதிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. 15 ஆண்டுகள் முதிர்வு காலமுடைய இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் நீட்டிக்க முடியும். அதாவது இந்த திட்டத்தை 25 ஆண்டுகள் வரையில் முதலீடு செய்ய முடியும்.

அவ்வாறு முதலீடு செய்தல் வைப்புத் தொகை மற்றும் வட்டி என்பனவற்றின் ஊடாக 1.3 கோடி இந்திய ரூபா வருமானமாக ஈட்டிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க

வெறும் 500 ரூபாய் போதும்: ஒரே ஆண்டில் 25% லாபம் கிடைக்கும்!

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!

English Summary: Post Office: If you invest 417 rupees daily, you will earn 1 crore rupees! Published on: 15 November 2022, 07:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.