நிலையான வருமானம் உள்ள யாராக இருந்தாலும் முதலீடு செய்ய விரும்புவார்கள், இது அவர்களின் வயதான காலத்தில் பயனளிக்கும் மிக பெரிய உத்தரவாதமான விளங்குகிறது, மேலும் அதனுடன் சேர்த்து இன்னும் கொஞ்சம் போனஸ் கிடைக்கும். கிராம பாதுகாப்பு அல்லது முழு ஆயுள் காப்பீடு என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை தபால் அலுவலகம் வழங்குகிறது.
தபால் அலுவலக கிராம பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19 மற்றும் அதிகபட்சம் 55 ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10,000 மற்றும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 10 லட்சம் ஆகும்.
4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் வசதி கிடைக்கும். போனஸ் நன்மையை 5 வருடங்களுக்குள் திட்டத்திலிருந்து திரும்பப் பெற முடியாது.
இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர் 55 வயது , 58 வயது மற்றும் 60 வயது வரை - பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது.
ஒரு நபர் 19 வயதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கிராமப் பாதுகாப்பு பாலிசியில் சேர்ந்து கொண்டால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் ரூ. 1515, 58 ஆண்டுகளுக்கு ரூ. 1463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ. 114 ஆகும்.
55 ஆண்டுகளுக்கு பாலிசி பலன் ரூ. 31.60 லட்சம், பாலிசி பலன் ரூ. 33.40 லட்சம் மற்றும் 60 ஆண்டுகளுக்கு பாலிசி பலன் ரூ. 34.60 லட்சம் ஆகும். இந்த பாலிசி ஒரு நியமன வசதியையும் வழங்குகிறது.
ஒரு வாடிக்கையாளர் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
தபால் காப்பீடு குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 180 5232/155232 ஐ நீங்கள் அழைக்கலாம். கூடுதலாக, இந்த இணையதளத்தில் மேலும் தகவலுக்கு நீங்கள் http://www.postallifeinsurance.gov.in/ ஐப் பார்வையிடலாம்.
மேலும் படிக்க..
Share your comments