PPF கணக்குதாரர்கள், இனி எப்போது வேண்டுமானாலும் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு ஏற்ப விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே பணம் தேவைப்படும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்
தனியார் நிறுவனங்கள் மற்றும் சொந்தத் தொழில் செய்வோர் என யார் வேண்டுமானாலும், தங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதற்கு ஏதுவாக அறிமுகப்படுத்துள்ள திட்டம்தான் பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட்(PPF). இது, நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த வழியாகும். இதில் உங்களுக்கு சரியான வட்டி கிடைக்கிறது. முதலீடு செய்யப்படும் பணம், அதில் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வு காலம் முடிந்தவுடன் பெறப்படும் தொகை ஆகியவற்றுக்கும் வரிவிலக்கும் உண்டு. இதனால் பிபிஎஃப் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக உள்ளது.
விதிகள்
ஒரு நபர் தனது பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே திறந்துகொள்ள முடியும்.இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். இதில் முதலீடு செய்த பணத்தை இடையில் திரும்பப் பெற முடியாது என்று சிலர் தவறாக கருதுகின்றனர். உண்மை அதுவல்ல.
எப்போது எடுக்கலாம்?
பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே, உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் நீங்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம். பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் தொற்று ஏற்படும் சமயத்தில் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இது தவிர, கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக பிபிஎஃப் கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் எடுக்கலாம். ஒரு கணக்கு வைத்திருப்பவர் வெளிநாட்டு இந்தியராக (என்ஆர்ஐ) மாறினாலும், அவர் தனது பிபிஎஃப் கணக்கை மூடலாம்.
5 ஆண்டுகளில்
அதேசமயம் எந்த ஒரு கணக்கு வைத்திருப்பவரும் பிபிஎஃப் கணக்கைத் திறந்து 5 வருடங்கள் முடிந்த பிறகுதான் அதை மூட முடியும். முதிர்வு காலத்திற்கு முன் மூடப்பட்டால், கணக்கைத் திறந்த தேதியிலிருந்து மூடும் தேதி வரை 1% வட்டி கழிக்கப்படும்.
இறந்துவிட்டால்
பிபிஎஃப் கணக்கின் முதிர்வுக்கு முன் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், ஐந்தாண்டு கணக்கில் பங்களிக்க வேண்டும் என்கிற நிபந்தனை அவரின் நாமினிக்கு பொருந்தாது. நாமினி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுக்கலாம். ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு கணக்கு அந்த கணக்கை தொடர நாமினிக்கு உரிமை இல்லை.ஒரு கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுக்க விரும்பினால், அவர் படிவத்தை பூர்த்தி செய்து பாஸ்புக் மற்றும் அதன் ஜெராக்ஸ் உடன் பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தபால் அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
உறுதியான வட்டி
பிபிஎஃப் கணக்கின் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யலாம்.
விதிகளில் மாற்றம்
இந்நிலையில் PPF கணக்குதாரர்கள், இனி எப்போது வேண்டுமானாலும் முழு பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு ஏற்ப விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே பணம் தேவைப்படும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...
Share your comments