சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் ஜூலை 1 முதல் விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) மற்றும் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு பத்திரம், கிஷன் விகாஸ் பத்திரம் மற்றும் பி.பி.எஃப். உட்பட அனைத்து சிறிய சேமிப்புகளுக்கும் வட்டி விகிதம் மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. அதன்படி, அடுத்த மாதம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சிறிய சேமிப்புக்கான வட்டி விகிதங்களை வெளியிட மத்திய அரசு தயாராக உள்ளது.
எனவே ஜூலை 1 முதல், சிறிய சேமிப்பு திட்டங்களில் (small saving scheme ) முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த லாபம் கிடைக்கும். தற்போது, சிறிய சேமிப்பு திட்டம் 4% முதல் 7.6% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. சிறிய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அதாவது ஒரு காலாண்டு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் நிதி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க...
வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!
ஈஸியான சேமிப்பு திட்டம்! SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி?
Share your comments