Digital transaction at post offices!
நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில், 'க்யூ ஆர் கோட்' வாயிலாக பணம் செலுத்தும் திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு, 'டிஜிட்டல்' முறையிலான பரிவர்த்தனையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பெரிய வணிக வளாகங்கள் முதல், சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை, க்யூ ஆர் கோட் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வர்த்தகர்கள் பணம் பெறுகின்றனர்.
இனி தபால் நிலையங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள வசதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக, நாடு முழுதும் உள்ள 1,790 தலைமை தபால் நிலையங்களில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital Transaction)
'ஸ்பீடு போஸ்ட், பார்சல், பிசினஸ் போஸ்ட், டைரக்ட் போஸ்ட்' மற்றும் பதிவு தபால் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும், வாடிக்கயைாளர்கள் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் 'ஸ்கேன்' செய்ய வசதியாக அனைத்து கவுன்டர்களிலும், க்யூ ஆர் கோட் அட்டைகள் சுவர்களில் ஒட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தபால் நிலையங்களில் இனி நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.
மேலும் படிக்க
Share your comments