தீபாவளிப் பண்டிகையின்போது, அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கும் அறிவிப்பை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் முக்கியமானது பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகும்
6% அகவிலைப்படி
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6% உயர்த்தப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இது மட்டுமல்லாமல், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளும் அரசு ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
அக்.1ம் தேதி முதல்
பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தின்போது, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 6% உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அகவிலைப்படி உயர்வால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல்
அதுமட்டுமல்லாமல், தற்போது அமலில் உள்ள பென்சன் திட்டத்துக்கு மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் வசதியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!
மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments