ஃபாஸ்ட் புட் எனப்படும் துரித உணவு என்பது தற்போதைய டிரெண்டிங்காக மாறி வருகிறது. அதிலும் பீட்சா என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
கஞ்சா பீட்சா
பலரது மனம் கவர்ந்த உணவுகளில் பீட்சாவிற்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இதனைப் பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களைத் தன்வசம் தக்கவைத்துக்கொள்ள இந்தோனேஷிய நிறுவனம் செய்தது என்ன தெரியுமா?
பொதுவாக போதைப்பொருள் என்றாலே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்று. அதிலும் அதிக போதை தரக்கூடிய கஞ்சா செடி பற்றி சொல்லவே வேண்டாம். கஞ்சாவை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் சட்டவிரோதமான ஒன்றாக பல இடங்களிலும் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற ஆபத்து நிறைந்த கஞ்சாவை பயன்படுத்தவே அஞ்சும் நிலையில் ஒரு உணவகம் இந்த கஞ்சாவை பயன்படுத்தியே இந்தக்கால குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பும் துரித உணவான பீட்சாவை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது.
புதுமையான முயற்சி (Innovative)
தாய்லாந்தில் 'கிரேசி ஹேப்பி பீட்சா' பலராலும் விரும்பப்படும் ஒன்று. கடந்த சில தினங்களாகவே பீட்சாவின் விற்பனை மந்தமான நிலையிலேயே காணப்பட்டது. ஆகையால் இந்த மந்தமான நிலையை போக்க எண்ணிய உணவகம், புதிய யுக்தியை கையாளும் வகையில் கஞ்சா இலை வைத்த பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதுமையான கஞ்சா பீட்சா குறித்து அந்த உணவகத்தின் மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறுகையில், "கிரேசி ஹேப்பி பீட்சா தாய்லாந்தில் அனைத்து பீட்சா கிளைகளிலும் கிடைக்கிறது. இருப்பினும் சில நாட்களாக இதன் விற்பனை குறைவாகவே இருந்தது. அதனால் தான் இந்த புதிய செய்முறையை பீட்சாவில் புகுந்தினோம்.
நல்ல தூக்கம் (Good sleep)
புதுமையானதை அறிமுகப்படுத்துவதில் எங்கள் நிறுவனம் தான் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். கஞ்சாவுடன் இந்த பீட்சாவை சேர்த்து உண்ணும்போது உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். இந்த பீட்சா மீது வருத்த கஞ்சா இலைகள் தூவப்பட்டு இருக்கும், அதோடு பாலாடைக்கட்டியிலும் இந்த கஞ்சாவை சேர்த்து அப்ளை செய்துள்ளோம்.
விலை எவ்வளவு? (How much does it cost?)
இந்த ஒரு பீட்சாவின் விலை ரூ.1123 ஆகும். மேலும் இதனுடன் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகள் வைக்கப்பட்டால் கூடுதலாக ரூ.225 வசூல் செய்கிறோம்" என்று தெரிவித்தார். இதுபோன்று கஞ்சா இலைகளைப் பயன்படுத்துவது தாய்லாந்தில் சட்டவிரோதமான செயலாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments