1. மற்றவை

மீண்டும் உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Repo Interest Rate raised

ரெப்போ வட்டி விகிதத்தை (வங்கி கடனுக்கான வட்டி விகிதம்) 0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 5 வாரங்களில், 2வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் (Repo Interest Rate)

பணவீக்கத்தை உயர்த்துவதற்கான முடிவு, மும்பையில் ரிசர்வ் வங்கியில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்டது. தற்போது, ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. இதற்கே காரணம் பணவீக்கம் தான் என, ரிசர்வ் வங்கி காரணம் கூறுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கியில் கடன் வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மொத்தத்தில் பொருளாதார வல்லுனர்கள் கூறியதன் அடிப்படையில் ரெப்போ வட்டி விகித உயர்வால் 20-25 புள்ளிகள் வங்கி வட்டிக்கடன் விகிதம் உயரும் என்றும், இந்த வட்டி விகித உயர்வால் கடன் தேவையை எந்த அளவுக்கும் பாதிக்காது என்றும் தெரிகிறது.

‌ரெப்போ வட்டி உயர்ந்தால், வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம். ஆனால் அதே நேரத்தில், வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்தபவர்களுக்கு கொண்டாட்டம் என்பதும் தெரிந்ததே.

மேலும் படிக்க

டிஜிட்டல் வடிவில் சான்றிதழ்கள்: வாட்ஸ் ஆப்பில் சேமிக்கலாம்!

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்: மகிழ்ச்சியில் பயனாளிகள்!

English Summary: Repo interest rate rises again: Reserve Bank announcement! Published on: 09 June 2022, 12:33 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.