1. மற்றவை

மிக குறைந்த விலையில் சந்தைக்கு வரப்போகுது ராயல் என்பீல்டு ஹண்டர் 350!

R. Balakrishnan
R. Balakrishnan
Royal Enfield Hunter 350

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய பைக்குகளே இதற்கு காரணம். இந்த வரிசையில் புதியதாக வரவுள்ள ஒரு பைக்தான் ஹண்டர் 350. இந்திய வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விலைதான் அந்த முக்கியமான காரணம்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான பைக்கான ஹண்டர் 350 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த கேள்விக்கு வரும் ஆகஸ்ட் 7ம் (August 7) தேதி நமக்கு உறுதியான பதில் கிடைத்து விடும். ஏனெனில் அன்றைய தினம்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வரவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, ஹண்டர் 350 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விலை, இன்ஜின், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களும் நமக்கு உறுதியாக தெரியவந்து விடும்.

இஞ்சின் (Engine)

ஆனால் அதற்கு முன்பாக இந்த பைக் குறித்து ஒரு சில யூகங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நமக்கு நன்கு பரிட்சயமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 349.34 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கிற்கு அடுத்தபடியாக புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அந்த பைக்கிலும் கூட இதே இன்ஜின் தான் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'J' பிளாட்பார்ம் (J Platform) அடிப்படையில் ஹண்டர் 350 பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் நீளம் 2,055 மிமீ ஆகவும், அகலம் 800 மிமீ ஆகவும், உயரம் 1,055 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 1,370 மிமீ ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 வேரியண்ட்களிலும் வசதிகள் மாறுபட்டாலும், ஒரே இன்ஜின்தான் வழங்கப்பட்டிருக்கும். இந்திய சந்தையில், யமஹா எஃப்இஸட்25 (Yamaha FZ25), சுஸுகி ஜிக்ஸெர் (Suzuki Gixxer) மற்றும் பல்சர் 250 (Pulsar 250) ஆகிய பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 போட்டியிடும். அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) போன்ற பைக்குகளுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக சந்தைக்கு வரும் ஹோண்டா சிபி350 பிரிகேட்!

மினி பஸ்ஸில் பேடிஎம் வசதி: ஆச்சரியத்தில் பயணிகள்

English Summary: Royal Enfield Hunter 350 is coming to the market at a very low price! Published on: 28 July 2022, 07:14 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.