அஞ்சலக சேமிப்பில் இந்த திட்டம், உங்களுக்கு 10 ஆண்டுகளில் 16 லட்சத்தைப் பரிசாக அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது.இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகப்பட்ச முதலீடாக எந்த வரம்பும் கிடையாது.
நம் வருமானத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை வளமாக மாற்றிக்கொள்வதற்கான வழியும் கிடைக்கும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், நம்முடைய முதலீட்டிற்கு பாதுகாப்பும் வேண்டும், அதிக வட்டியும் கிடைக்க வேண்டும். அப்படியொரு சேமிப்புத் திட்டம்தான் போஸ்ட் ஆபிஸின் ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீம்.
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை போல், தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் நல்ல பலனை பெறலாம்.
சம்பாதிக்கும் பணத்தில் மாதந்தோறும் குறைந்த அளவிலான கட்டணத்தைச் சேமிக்க விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த சாய்ஸ் ஆகும். போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி அதிக வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் கூட செலுத்தலாம். அதேநேரத்தில் அதிகப்பட்ச முதலீட்டிற்கு, எவ்வித வரம்பும் கிடையாது.
இந்த திட்டத்தில் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டித் தொகை வாடிக்கையாளரின் கணக்கில் செலுத்தப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், 5.8 சதவீதம் வட்டித் தொகை செலுத்தப்படும். அதன்படி, 10 ஆண்டுகளில் உங்கள் கணக்கின் இருப்பு ரூ16 லட்சத்தை எட்டிவிடும். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைக்கப்பெறுவதால், முதலீட்டுக்கு நல்ல வருமானத்தை பெற முடிகிறது.
மேலும் படிக்க...
Share your comments