1. மற்றவை

குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 3 lakh allowance for children - District Collector announces!

கொரோனா வைரஸ் தொற்றால், தங்கள் பெற்றோரில் ஒருவரை இழந்தக் குழந்தைகளுக்குத் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனாவால் தமிழகம் முழுவதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்துத் தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி அவர்களுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

நிவாரண உதவித் திட்டம்

இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து அவர்கள் 18 வயது முடிவு பெறும்போது வட்டியோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேபோல கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் தென்காசி மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர் அல்லது அவர்களில் ஒருவரை இழந்த 220 குழந்தைகள் இதுவரையிலும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் அனைவருடைய ஆவணங்களும் சரி பார்த்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, வங்கி வைப்புத்தொகை சான்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

29 வயது தாய்க்கு 19 வயதில் மகள்: இணையத்தில் வைரல்!

அத்தியாவசிய மருந்துகள் விலையைக் குறைக்க மத்திய அரசு முடிவு!

English Summary: Rs 3 lakh allowance for children - District Collector announces! Published on: 29 January 2022, 09:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.