1. மற்றவை

தினமும் சிறு முதலீடு- ரூ.40 லட்சம் வருமானம் தரும் சூப்பர் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs 40 lakh return on small investment - Super plan!

வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில், சேமிப்பைத் தலையாயக் கடமையாகக் கொண்டு சேமிக்க விரும்புபவர்களா நீங்கள்? குறிப்பாக சிறு முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்கு அஞ்சலக சேமிப்பின் இந்தத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும்.

சிறு சேமிப்பு (Small storage)

முதலீடுகளை பொறுத்தவரை ரிஸ்க்கான முதலீடு, ரிஸ்க் இல்லா முதலீடு என இருவகை உண்டு. ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், கிரிப்டோகரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் நல்ல வருமானம் சம்பாதிக்க சில திட்டங்கள் உண்டு

அஞ்சலகச் சேமிப்பு (Postal Saving Scheme)

குறிப்பாக, அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் ரிஸ்க் இல்லாதவையாகவும், நல்ல வருமானம் தருபவையாகவும் உள்ளன. இதில் சிறு சேமிப்புத் திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

PPF திட்டத்தில் தினமும் 417 ரூபாய் தினமும் சேமித்து முதலீடு செய்தால் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியும்.அதாவது, தினமும் 417 ரூபாய் என்றால் மாதம் 12500 ரூபாய் முதலீடு. ஆக ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய்.

சேமிப்பு காலங்கள் (Storage periods)

PPF திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். ஆக, 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் ரூபாய் என்றால் மொத்தம் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம்.

வட்டி (Interest)

தற்போது PPF திட்டத்துக்கு 7.1% வட்டி கிடைக்கிறது. கூட்டு வட்டியில் பலன் மூலம் வட்டி வருமானம் மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
நாம் மொத்தமாக முதலீடு செய்த தொகை 22.50 லட்சம் ரூபாய். வட்டி வருமானம் மூலம் கிடைப்பது 18.18 லட்சம் ரூபாய்.

திட்டம் முதிர்ச்சி அடையும்போது மொத்தமாக நம் கையில் கிடைப்பது 40.68 லட்சம் ரூபாய். உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீட்டுத் தொகையை கூட்டியோ, குறைத்தோ லாபம் சம்பாதிக்க முடியும்.

மேலும் படிக்க...

PM kisan: 2 நாட்களுக்கு பிறகு விவசாயிகளின் கணக்கில் 10வது தவணை!எப்படி சரிபார்ப்பது!

PM Kisan-இன் 10ஆம் தவணை! ரூ.2000த்திற்கு பதில் ரூ.4000 யாருக்கு?

English Summary: Rs 40 lakh return on small investment - Super plan! Published on: 15 December 2021, 10:40 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.