குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை யாருக்குத்தான் சாக்லேட் பிடிக்காமல் இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து ஆரோக்கியமாகச் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு. குறிப்பாக கடைகளில் நீங்கள் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்க ஆகும் செலவைக் கணக்குப் போட்டுப் பார்த்தாலே பெற்றோர்களுக்கு தலைச்சுற்றும்.
கடைகளின் வாங்கும் சாக்லேடுகளால ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தும் வேறுவழியில்லாமல் வாங்கு சாப்பிட்டு வருகின்றனர். நீங்கள் வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் மாதம் ரூ.1 லட்சம் லாபம் தரும் சாக்லேட் பிசினஸை வீட்டிலிருந்தே செய்வது குறித்து இங்குக் காணலாம்.
சாக்லேட் தொழில் (Choclate Business)
நீங்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுத்து அதனை முறையாகக் கற்றுக்கொண்டு. அவர்கள் சொன்ன தேவையான உபகரணங்களை வாங்கி சாக்லேட் செய்யத் தொடங்கலாம். மார்க்கெட்டில் சாக்லேட் செய்யத் தேவையான மூலப்பொருட்களை வாங்க ஆரம்பக்கட்ட முதலீடாக ரூ.10,000 முதல் ரூ.20,000 தேவைப்படும். சாக்லேட் செய்யத் தேவையான மோல்டுகளை முதலில் வாங்க வேண்டும். அதன்பின் சாக்லேட் செய்வதை பலர் ஆன்லைன் வகுப்புகள் மூலமும் எடுத்து வருகின்றனர். அதற்கு ரூ.4000 – ரூ.5000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
மார்க்கெட்டிங் (Marketing)
உங்கள் பிசினஸை வீட்டின் அருகில் உள்ள நபர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் முதலில் விற்கத் தொடங்கினால் போதும் அதன் சுவையை உணர்ந்த மக்கள் ஆர்டர்களை குவிக்கத் தொடங்குவர். வாரம் 10 கிலோ முதல் 20 கிலோ வரை இன்றைய மார்க்கெட் விலையின்படி கிலோவிற்கு ரூ.2000/- என வைத்து வரும் ஆர்டர்களை செய்து கொடுத்தால் மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் உறுதி.
மேலும் படிக்க
அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: விரைவில் உயரும் அகவிலைப்படி!
Share your comments