அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற உதவும் ஆ தார் அட்டைக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என்றத் தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
இந்தியக் குடிமகனின் பிரதான அடையாள அட்டையாக அண்மைகாலமாக மாறிவருகிறது ஆதார் அட்டை. ஆதார் எண், நம்முடைய ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிறந்த குழந்தை முதல், இறுதியாத்திரைக்கு எடுத்துச் செல்லப்படும் பூத உடல் வரை ஆதார் கட்டயமாக்கப்பட்டுள்ளது. ஏன் ஆதார் அட்டை இல்லாவிட்டால், நாம் வாழ்ந்ததற்கான அடையாளமே அழிக்கப்பட்டுவிடும் நிலை விரைவில் உருவாகும் அளவுக்கு ஆதார், அண்டம் முழுவதும் வியாபித்துள்ளது. அப்படி ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஒரு தொகை வழங்கப்படும் என செய்தி பரவி வருகிறது.
கடன் கிடைக்கும்
வங்கிகளில் கடன் பெறுவதற்கு ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. எனவே ஆதார் கார்டை வைத்து பெரிய அளவில் கடன் வாங்கலாம், அரசிடமிருந்து நிதியுதவி பெறலாம் போன்ற செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் நிதி மோசடிகளும் செய்யப்படுகின்றன.
ரூ.10,000
இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், சமூக வலைதளங்களில் பரவும் அனைத்து செய்திகளும் உண்மை என்று கூறிவிட முடியாது. பல போலியான செய்திகளும் பரப்பப்படுகின்றன.
உண்மை சரிபார்ப்பு
இந்த விஷயம் குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பாக உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டது. இதில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.10,000 சலுகை வழங்கப்படும் என்பது உண்மையா இல்லையா என்பது தெரியவந்துள்ளது.
அதாவது மத்திய அரசிடம் அப்படி ஒரு திட்டமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI, அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இதுபோன்ற ஏதேனும் திட்டம் வந்தால் UIDAI அதற்கான அறிவிப்பை வெளியிடும்.
ஏமாற வேண்டாம்
ஆதார் அமைப்பிடமிருந்து வரும் அறிவிப்புகள் மட்டுமே உண்மையானது. இதுபோல, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பெரும்பாலான செய்திகள் போலியானதாகவே இருக்கும். எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
Share your comments