தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் ஒரு திட்டம் வகுத்து, மாதம் ரூ.1500 வழங்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை குடும்பத் தலைவிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 3,55,000 ரேஷன் அட்டை உள்ள குடும்பங்கள் உள்ளன. இதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் சுமார் 1,63,000 சிவப்பு நிற அட்டை உள்ளவர்களும், மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் சுமார் 29,000 (AAY) கார்டுமாக சுமார் 1,92,000 உள்ளனர், மீதம் 1.62.000 மஞ்சள் அட்டை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.55 வயதிற்கு மேற்பட்ட முதியோர், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கண்ணிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என சுமார் 1,64,853 பேர் உள்ளனர்.
நிதியுதவி
இவர்களில் 55 வயதிலிருந்து 60 வயது வரை ரூ.2000-மும், 60 வயதிலிருந்து 79 வயது வரை ரூ.2500-ம், 80 வயதிற்கு மேல் ரூ.3500-ம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படுகிறது.
சமூக நலத்துறையில் 40 சதவீதத்திற்கு மேல் உடலில் குறைபாடுள்ள சுமார் 21,577 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 2000-லிருந்து ரூ.3500 உதவித்தொகையும், மீன்வளத்துறையின் மூலம் 50 வயதிற்கு மேற்பட்ட சுமார் 8000 மீனவர்களுக்கு ரூ.2500, ரூ.3000,ரூ.4000 என வயதிற்கு ஏற்றவாறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதேபோல் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நலத்துறை, மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றின் மூலம் சுமார் 1,94,430 குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் புதுவையில் செய்தியாளர்களை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:-
புதுச்சேரியில் 1,60,000 குடும்பத்தினருக்கு எவ்வித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் 1 இலட்சம் குடும்பத்தினரை இனம் கண்டு அவர்களின் குடும்பத்திற்கு மாதம் ரூ.1500 அரசு வழங்க முன்வர வேண்டும்.
ஏழை குடும்பத் தலைவிக்கு பாதுகாப்பு அளிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தனது உயிர் மூச்சு உள்ளவரை பெண்கள் சமுதாய நலத்திற்காக வாழ்ந்து, மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இத்திட்டத்தினை அமுலுக்கு கொண்டு வர வேண்டும்"
இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க...
பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!
Share your comments