இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானதாக விளங்கும் எஸ்பிஐ வங்கி,வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக மனைவி பெயரில் வீடு கட்ட வேண்டும் என விரும்புபவராக இருந்தால், உங்கள் மனைவியும் வேலைக்குச் செல்பவராக இருப்பின் இந்த சலுகைகயை நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
சொந்த வீடு கனவை நனவாக்க வங்கிகள் வரிசை கட்டிக்கொண்டு கடனை வாரி வழங்குகின்றன. இருப்பினும், வீட்டுக்கடன் என வரும்போது, எஸ்பிஐ வங்கியில்தான் வட்டி குறைவு. பல வருடங்களோடுக் கணக்கிடும்போது, இப்போதெல்லாம் வீடு கட்ட கோடிக் கணக்கில் செலவாகிறது. சிமெண்ட் முதல் எல்லாப் பக்கமும் விலைவாசி ஏறிவிட்டது. ஆனாலும், வீடு கட்ட நினைப்பவர்கள் முழுத் தொகையையும் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கைவசம் சிறியத் தொகை இருந்தால் மட்டும் போதும். வீட்டுக் கடன் வாங்கி வீட்டைக் கட்டிவிடலாம். பல்வேறு வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகின்றன.
குறைந்த வட்டி மட்டுமல்லாமல் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு வங்கிகள் சலுகை முறையில் கடன் வழங்குகின்றன. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அப்படியொரு சலுகையை அறிவித்துள்ளது.
குறைந்த வட்டி
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள இந்த சிறப்புச் சலுகையின் கீழ் பெண் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். ஆனால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில்தான் இச்சலுகையைப் பெறமுடியும்.
வயது
18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். கடன் காலம் மொத்தம் 30 ஆண்டுகள்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 6.65 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வாங்கலாம். இதற்கான செயல்பாட்டுக் கட்டணம் குறைவுதான். கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.
குறைந்த வட்டி
முன்கூட்டியே கடனை அடைப்பதற்கும் கட்டணங்கள் இல்லை. வழக்கமான வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை விட பெண் வாடிக்கையாளர்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments