சிறு முதலீட்டாளர்கள் மொத்த பணத்தையும் ஒரே திட்டத்தில் போடாமல் பலதரப்பட்ட சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது நிபுணர்களின் அட்வைஸ். ஆக, பலதரப்பட்ட சொத்துகளை அல்லது திட்டங்களை தேடுவோர் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?
முதலீடு (Investment)
முதலீடுகளுக்கு தீமேட்டிக் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல சாய்ஸாக உள்ளன. இதற்கு ஒரு உதாரணத்தை பார்க்கலாம். SBI Magnum COMMA Fund - Direct Plan - Growth திட்டம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 486.87 கோடி ரூபாய் சொத்துகள் நிர்வாகத்தில் உள்ளன. இது ஒரு மிக ரிஸ்க்கான ஃபண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது நடுத்தர அளவு கொண்ட எக்விட்டி ஃபண்ட். இந்த ஃபண்ட் சரக்குகள் மற்றும் சரக்குகள் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
இத்திட்டத்தில் லம்ப்சம் முறையின் குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். SIP முறையில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். சரி இந்த ஃபண்ட் எவ்வளவு லாபம் கொடுத்துள்ளது? திட்டம் தொடங்கப்பட்டது முதல் சராசரியாக ஆண்டுக்கு 14.81% லாபம் கொடுத்துள்ளது.
Lumpsum முறை முதலீட்டில் லாப விகிதம்:
1 ஆண்டு - 36.39%
2 ஆண்டு - 146.68%
3 ஆண்டு - 109.93%
5 ஆண்டு - 119.76%
திட்டம் தொடங்கியது முதல் - 259.66%
SIP லாபம்:
1 ஆண்டு - 7.72%
2 ஆண்டு - 46.32%
3 ஆண்டு - 67.58%
5 ஆண்டு - 82.54%
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
500 ரூபாயில் 5 லட்சம் லாபம் தரும் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?
Share your comments