வாட்ஸ் அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு செய்வதைச் சவுதி பாலியல் குற்றமாக (Sexual Harrasment) அறிவித்துள்ளது. ஒருவர் வாட்ஸ்அப்பில் ஹார்ட் எமோஜியை அனுப்பி தொந்தரவு செய்தால் அவருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் எனச் சவுதி சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவுதி சட்டப்படி, ஹார்ட் எமோஜியை (Heart Emoji) அனுப்பியவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 100,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படலாம் என அந்நாட்டுச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றம் (Crime)
சவுதி அரேபியாவின் மோசடி தடுப்பு சங்கத்தின் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி அந்நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'வாட்ஸ்அப்பில் ஹார்ட் இமோஜியை அனுப்புவது பாலியல் தொல்லை குற்றத்திற்குச் சமம். சில குறிப்பிட்ட படங்கள் மற்றும் இமோஜிகளை சாட் செய்யும் போது பயன்படுத்துவது பாலியல் குற்றமாகவே கருதப்படும். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தால், இது போன்ற மேசெஜ்களை அனுப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் சொல்வது என்ன? (What does the law say?)
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அப்போது விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இது போன்ற மெசேஜ்களை அனுப்பியவரே அனைத்துக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த வழக்கில், குற்றவாளிக்கு எதிராக 100,000 சவுதி ரியான் அல்லது இரண்டு வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒருவர் திரும்பத் திரும்ப இதே செயல்களில் ஈடுபட்டால் அவருக்கு ஐந்து வருடச் சிறைதண்டனை மற்றும் 300,000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க
தமிழில் திருமணப் பத்திரிகை அச்சடித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்!
Share your comments