பொதுத்துறை வங்கியான கனரா வங்கி (Canara Bank) கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்.
வட்டி விகிதம் (Interest Rate)
கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை மூன்று முறை உயர்த்தியது. இதனால் ரெப்போ வட்டி 4%இல் இருந்து 5.40% ஆக உயர்ந்துள்ளது. அடுத்து வரும் கொள்கை கூட்டங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டே போகின்றன. இந்த வரிசையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நாளை (செப்டம்பர் 7) முதல் அமலுக்கு வருகின்றன.
EMI கட்டணம் (EMI Fee)
கனரா வங்கி ஒரு ஆண்டுக்கான MCLR வட்டி விகிதத்தை 7.65%இல் இருந்து 7.75% ஆக உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.
இதன் விளைவாக, மாத EMI கட்டணம் உயரும்.
ஏற்கெனவே கடன் வாங்கி திருப்பி செலுத்தி வருவோர், புதிதாக கடன் வாங்குவோர் என இரு தரப்பினருக்கும் EMI கட்டணம் உயரும்.
மேலும் படிக்க
LIC புதிய பென்சன் திட்டம்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
Share your comments