சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் சிம்பிள் ஒன் என்ற மின்சார பைக்கை அறிமுகம்படுத்தியுள்ளது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1 மற்றும் S1 ப்ரோ மற்றும் ஏத்தர் 450x போன்ற மற்ற மின்சார பைக்குகளுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் மின்சார பைக்கிற்கு (Simple One Electric Scooter) ப்ரீ-ஆர்டர்களை மட்டுமே அனுமதிக்கிறது. ஓலா மின்சார ஸ்குட்டருக்கு போட்டியாக இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரை ரூ .1,947 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ரூ .1,09,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (எக்ஸ்-ஷோரூம் விலை). இருப்பினும், சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .60,000 வரையிலான ஃபேம் 2 (Fame 2) மானியத்தை பெறுவதற்கான தகுதி கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநில மானியங்கள் இருந்தால் அவையும் கிடைக்கும்.
நிறுவனம் பைக்குகளை டெலிவரி செய்யத் தொடங்கும் போது, உங்கள் ஆர்டர் தயாரிக்கப்படும். அதன் பிறகு, உங்கள் நகரத்தில் உள்ள ஆர்டர் வரிசையைப் பொறுத்து, ஸ்கூட்டரை பெறும் செயல்முறையை நிறைவு செய்ய, உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் இன் விநியோகங்கள் ஜனவரி 1, 2022 க்குள் தொடங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சிம்பிள் ஒன் பைக் நான்கு ஸ்டாண்டர்ட் வணங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசன் பிளாக், அசூர் ப்ளூ, கிரேஸ் ஒயிட் ஆகிய வண்ணங்களுடன் ஒவ்வொரு மெட்ரோ நகரத்திலும் தேவையைப் பொறுத்து ஒரு வண்ணம் வழங்கப்படும். உதாரணமாக, பெங்களூருவில் நம்ம ரெட் என்ற வண்ணத்தில் சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் வழங்கப்படும்,
சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) 236 கிமீ என்ற வரம்பை அளிக்கிறது. சிம்பிள் ஒன் பைக் அடையக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிமீ ஆகும். பைக்கில் 4.8kWh பேட்டரி மற்றும் 7kW மோட்டார் உள்ளது.
சிம்பிள் ஒன் ஸ்கோவ்ற்றில் ஒரு ஸ்மார்ட் டாஷ்போர்டு, உங்கள் பைக்கோடு உங்களை இணைக்கும் ஒரு செயலி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உங்கள் அழைப்புகள் மற்றும் இசை தேவைகளுக்கான ப்ளூடூத் இணைப்பு மற்றும் இவற்றைப் போன்ற இன்னும் பல அம்சங்கள் வழங்கப்படுள்ளன.
மேலும் படிக்க:
அம்மா இருசக்கர வாகனம் மற்றும் இலவச லேப்டாப் நிலை?
ரூ .499க்கு Ola S1 Electric Scooter ஐ வாங்கலாம்! அம்சங்கள் மற்றும் விலை!
ரூ. 65000 மட்டுமே பஜாஜ், ஹீரோ மற்றும் டிவிஎஸ் பைக் ! 90 கிமீ மைலேஜ்!
Share your comments