1. மற்றவை

பாம்பை வளைத்து Hairband-இப்படியும் நடக்குது உலகில்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Snake Curved Hairband- This is still happening in the world!

Credit : Sakshi

சமூக வலைதளங்களைத் தம் வசப்படுத்தும் குறிக்கோளுடன், சிலர் செய்கின்ற கோமாளித் தனங்களை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், நெட்டிசன்கள் அளிக்கும் ஆதரவோ அமோகமாக இருக்கிறது.அந்த வகையில், பாம்பை தன் தலைமுறைக்கு Hairband ஆக்கியிருக்கிறார் இந்த அதியசப் பெண்மணி.

பலவித வீடியோக்கள் (Various videos)

உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

அந்தவகையில் சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கவனிக்கவில்லை (Did not notice)

பெண் ஒருவர் தலையில் பாம்புடன் மாலில் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பை Hairbandடாக சுற்றிக்கொண்டு மாலில் உலா வரும் அந்த பெண்ணின் தலையை ஒருவர் கூட கவனிக்கவில்லை.

பாம்பு Hairband

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவுக்கு இதுவரை 15,400 வியூஸ்களும் (Views) 750 லைக்குகளும் (Likes) கிடைத்துள்ளன.
இந்த வித்தியாசமான வீடியோவில் (Viral Video), தலையில் ஒரு சிறிய பாம்புடன் ஒரு பெண் சர்வ சாதாரணமாக ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிகின்றது.

ஒய்யார நடை

தனது தலைமுடியை ஒருக் கொண்டையாகப் போட்டு, அந்த கொண்டைக்கு ஒரு Hairbandடைப் போல, அதில் ஒரு பாம்பையும் சுற்றி வைத்துள்ளார்.
அந்த பெண்ணை ஒருவர் படமெடுக்க அவர் மாலில் ஒய்யாரமாக நடமாடத் தொடங்குகிறார். அந்த பெண் தனது கொண்டையில் சுற்றியிருப்பது ஒரு உண்மையான பாம்பு என யாரும் அடையாளம் காணவில்லை. பாம்பின் தலைப்பகுதி நன்றாகத் தெரிந்தாலும், யாரும் அதை கவனிக்கவில்லை.

விபரீத விளையாட்டு (Contrasting game)

பாம்பால் (Snake) ஆன 'அசாதாரண' ஹேர்பேண்டை யாரும் கவனிக்காத இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் தலையில் பாம்பு நன்றாக தெரிந்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது.

மற்றவர்களின் கவனத்தை தம்வசம் திருப்ப வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விபரீதமான விளையாட்டுத் தேவையா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் படிக்க...

பாம்பைக் கொண்டு ஸ்கிப்பிங்- இணையத்தில் வைரலாகிறது!!

குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!

English Summary: Snake Curved Hairband- This is still happening in the world!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.