1. மற்றவை

சிறுவர் சேமிப்பு கணக்குத் திட்டத்தில் இத்தனை அம்சங்கள் உள்ளதா!

R. Balakrishnan
R. Balakrishnan
Children savings schemes

தமிழகத்தை சேர்ந்த பிரபல தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank) தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், சிறுவர்களுக்காகவே தனி சேமிப்பு கணக்கை வழங்குகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி.

சிறுவர் சேமிப்பு கணக்கு (Children savings schemes)

சிறுவர்களுக்காக லிட்டில் சூப்பர் ஸ்டார் சேமிப்பு கணக்கு (TMB Little Super Star Savings Account) சேவையை வழங்குகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. நாட்டின் எதிர்காலமான குழந்தைகளிடையே சேமிப்பு மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கூறுகிறது.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சேமிப்பு கணக்கின் சிறப்பு அம்சங்கள்:

  • ஏடிஎம் டெபிட் கார்டு வழங்கப்படும்
  • எங்கும் வங்கி சேவையை பயன்படுத்தும் வசதி (Anywhere Banking facility)
  • மாதத்துக்கு 10 முறை இலவசமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  • முதல் ஆண்டில் 10 காசோலைகளுடன் செக் புக் இலவசமாக வழங்கப்படும்.
  • இலவச நெட் பேங்கிங் வசதி. ஒரு நாளுக்கு 2500 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம்.
  • குறைந்தபட்ச மாதாந்தர இருப்பு தொகை வைக்காவிட்டாலும், முதல் ஆண்டில் கட்டணம் வசூலிக்கப்படாது.
  • நெட் பேங்கிங் வழியாக இலவச NEFT Remittance வசதி.

கணக்கு தொடங்க தகுதி

  • 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்களது தாய் அல்லது தந்தை வாயிலாக கணக்கை தொடங்கலாம். அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர் வாயிலாக கணக்கை தொடங்கலாம்.
  • கணக்கு தொடங்கப்படும் சிறுவரால் ஆங்கிலம் அல்லது தமிழ் போன்ற தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் இயல வேண்டும். மேலும் அவருக்கு கையெழுத்து போட தெரிந்திருக்க வேண்டும்

மற்றவை

  • லிட்டில் சூப்பர் ஸ்டார் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச மாதாந்தர இருப்பு தொகை 250 ரூபாய் இருக்க வேண்டும்.
  • இலவசமாக 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வசதியும் இருக்கிறது.

மேலும் படிக்க

வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது ICICI வங்கி: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!

English Summary: So many features of Children's Savings Account Scheme! Published on: 04 January 2023, 02:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.