தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய பென்சன் திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்துவோம் என்று இந்தக் கட்சித் தலைமை உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
வெகுநாள் கோரிக்கை
அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.
ஜார்கண்டில் அமல்
இந்தியாவில் தற்போது ஒரு சில மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில் அந்த வரிசையில் ஜார்கண்ட் மாநிலமும் இணைந்தது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்ற இப்போது நேரம் வந்துவிட்டது எனவும், ஊழியர்களின் நலனுக்காக பழைய பென்சன் திட்டத்தை ஜார்ஜண்ட் மாநிலத்தில் அமல்படுத்துவதாகவும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் செரான் கூறியிருந்தார்.
இமாசலப் பிரதேச தேர்தல்
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் தாங்கள் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதாக இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைமை உறுதியளித்துள்ளது.
பலமான வாக்குறுதி
இதுகுறித்து அக்கட்சியின் ராஜிந்தர் ராணா செய்தியாளர்களிடம் பேசுகையில், இமாச்சலப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்த உடனேயே திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். அதை எங்கள் தேர்தல் அறிக்கையில் வைப்போம். ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள எங்கள் அரசாங்கங்கள் பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுப்பதாக அறிவித்துள்ளன என்றார்.
எதிர்பார்ப்பு
சில மாநிலங்களில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்துள்ள நிலையில், தமிழக அரசும் விரைவில் முடிவு எடுக்குமா? என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க...
பொது இடத்தில் 'ஊதினால்' ரூ.2,000 அபராதம் - ஆண்கள் கவனத்திற்கு!
Share your comments