தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான இளநிலை (BVSc & AH) மற்றும் BTech பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 16 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக சிறப்பு பிரிவு மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு, பிடெக் கலந்தாய்வு நடைப்பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவுக்கான (BVSc & AH)-, பி.டெக். படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு முறை : நேரடியாக ( அனைத்து படிப்புகளுக்கும்)
கலந்தாய்வு நடைபெறும் இடம்: அண்ணா கலையரங்கம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, சென்னை- 600 007.
பட்டப்படிப்பு விவரம்- கலந்தாய்வு நடைப்பெறும் தேதி பின்வருமாறு:
16.08.2023: (காலை 9 மணி)
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH- இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்) மற்றும் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)
கலந்தாய்வு: சிறப்புபிரிவு- விளையாட்டு வீரர், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்)
17.08.2023: (காலை 9 மணி)
BVSc & AH- Academic stream and Vocational stream மற்றும் பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)
கலந்தாய்வு: 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் (காலையியல் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மற்றும் பிடெக் - உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)
18.08.2023: (காலை 9 மணி)
பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)
முதல் சுற்று கலந்தாய்வு: பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்/ கோழியினத் தொழில்நுட்பம்/ பால்வளத் தொழில்நுட்பம்)
படிப்புகள் விவரம் பின்வருமாறு:
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) தொடர்பான பட்டப்படிப்பு தமிழகத்தில் 7 கல்லூரிகளில் உள்ளது. மொத்த கல்வியாண்டு ஐந்தரை ஆண்டுகள் (MSVE விதிமுறை 2016-ன் படி, 4 ½ ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் 1 வருட உள்ளிருப்பு பயிற்சி).
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம்), தலைவாசல் (சேலம்), உடுமலைப்பேட்டை, வீரபாண்டி(தேனி) ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் உள்ள மொத்தம் 660 இடங்களுக்கு தற்போது மாணவர் சேர்க்கை நடைப்பெற உள்ளது.
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பம்:
கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் (BTech- Food Technology) 40 இடங்களும், பால்வள தொழில்நுட்ப பிரிவில் (BTech- Dairy Technology) 20 இடங்களும் உள்ளன. இந்த இரண்டு பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
கோழியின தொழில்நுட்பம்:
ஓசூர் மாவட்டம் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (BTech- poultry Technology) 40 இடங்கள் உள்ளன. இந்தப் பட்டப்படிப்பும் 4 ஆண்டுகள் பயிலும் தன்மை கொண்டது.
மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in )என்ற பக்கத்தை காணலாம். கலந்தாய்வு கூட்டத்திற்கு வரும் மாணவர்கள் ஒரு மணிநேரம் முன்னதாகவே கலந்தாய்வு நடைப்பெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் காண்க:
Share your comments