
மோட்டோரோலா(Motorola) 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ், போன் மற்றும் சார்ஜருக்கு இடையே எந்தவித தொடர்பும் (Physical Connect) தேவை இல்லை.
இப்போது மோட்டோரோலா (Motorola) அதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக மோட்டோரோலா(motorola) இந்த தொழில்நுட்பத்திற்கு 'மோட்டோரோலா ஒன் ஹைப்பர்'(Motorola 1 hyper) என்று பெயரிட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து அதன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுடன் தொடர்புடைய பெயரை பிராண்ட் மோட்டோரோலா பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளது. ஆகையால், நிறுவனம் பெயரை 'மோட்டோரோலா ஏர் சார்ஜிங்' (motorola air charging) என்று மற்றம் செய்துள்ளது.
Xiomi Mi ஏர் சார்ஜ் போலவே வேலை செய்யும்(Works just like the Xiaomi Mi Air Charger)
மோட்டோரோலாவின் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் ஒரு புதிய இடத்தை பிடித்துள்ளது மட்டுமல்லாமல், இது 'சியோமி மி ஏர் சார்ஜ்'(Xiomi Mi Air Charger) போலவே இருக்கிறது, அதைப் போன்ற பயன்பாடுகளுக்கே இதுவும் பயன்படுத்தப்படுகின்றது. சியோமியின் (Xiaomi) சல்யூஷன் ஒரு கான்செப்ட் மட்டுமே.
ஒரே நேரத்தில் 4 சாதனங்களை சார்ஜ் செய்யும்(Charging 4 devices simultaneously)
வீபோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மோட்டோரோலா ஏர் சார்ஜிங்(motorola air charging) தொழில்நுட்பம் ஒரே நேரத்தில் 4 சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. இது 3 மீ மற்றும் 100 டிகிரி சுற்றளவில் வேலை செய்யும்.
இதன் அறிமுகம் எப்போது?( When was it introduced?)
காகிதம், தோல் மற்றும் இவற்றை ஒத்த பொருட்களின் மூலம் இந்த சார்ஜர் செயல்படுகிறது என்று மோட்டோரோலா கூறியுள்ளது. இருப்பினும், பாதுகாப்பிற்காக, உயிரியல் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் மனித இருப்பு கண்டறியப்படும்போது சார்ஜ் செயல்பாடு நின்றுவிடும். இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எப்போது அறிவிக்கப்படும் என்று மோட்டோரோலா (motorola) இன்னும் தெரிவிக்கவில்லை.
இந்த தொழில்நுட்பத்திற்கு பொறுப்பான நிறுவனம் GuRu Wireless, Inc. பற்றி நிறுவனம் எதையும் சொல்லவில்லை என்பது மற்றொரு சுவாரசியமான விஷயமாகும். எனினும், இந்த சார்ஜரை மோட்டரோலோ (Motorola) விரைவில் அறிமுகம் செய்யும் என்று தொழில்நுட்ப நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் படிக்க:
Electric Bike: விலை ரூ. 50 ஆயிரம்! வெறும் 7 ரூபாயில் 100 கிலோமீட்டர் !
125 ரூபாய் காயின்- செப்டம்பர் 1 ஆம் தேதி பிரதமர் மோடி சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.
Share your comments