Mk Stalin Schemes
தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் மட்டுமே கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனமாக வாழ தொடங்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்கு முன் 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றதால் அத்தொகை கிடைக்கும் என்று மக்கள் நம்பியிருந்தனர். இதனால் கூட்டுக் குடும்பமாக தந்தை தாய் மகன் மருமகள் என்று வாழ்ந்த ஏராளமான மக்கள் மூன்று மாதங்களில் தனியாக பிரிந்து விட்டனர். பிரிந்த குடும்பத்தினர் புது ரேஷன் கார்டுகளுக்கும் விண்ணப்பித்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் 4000க்கும் மேற்பட்டோர் புது ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தனர். இதில் தகுதி வாய்ந்த 3600 பேருக்கு ரேஷன் கார்டுகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளன. இதனால் தாலுகா ரேஷன் கார்டுதாரர் எண்ணிக்கை 1.32 லட்சத்தில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
அரசு சலுகையை நம்பி திருமணத்துக்கு பிறகும் தாய் தந்தையுடன் வசித்து வந்த 3600 பேர் மூன்று மாதங்களில் தனி தனி குடித்தனமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இதனால் ஒரே மகனுக்கு மணம் செய்து அவர்களை தங்களுடன் வைத்திருந்த ஏராளமான பெற்றோர் கைவிட விடப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:
வாழ்நாள் முழுவதும் பென்சன் தரும் LIC-யின் சூப்பர் பாலிசி!
ரீசார்ஜ்: 130 ரூபாயில்,மாதத்திற்கு இலவச அழைப்பு! டேட்டாவுடன் பல நன்மைகள்
Share your comments