சீனாவை சேர்ந்தவர் மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு மிகப்பெரிய பவர் பேங்க்கை உருவாக்கியுள்ளார். இதில் மொபைல், டிவி போன்றவற்றையும் பயன்படுத்தலாமாம். தற்போது மொபைல் போனில் சார்ஜ் பிரச்னைகளை போக்க பவர் பேங்க் உபயோகிப்பது அதிகரித்துள்ளது. பயணத்தின்போது மொபைல் போனில் சார்ஜ் இல்லாத நேரங்களில் இந்த பவர் பேங்க் பெரிதும் உதவுகிறது.
பவர் பேங்க் (power bank)
அப்படியிருக்கையில், சீனாவைச் சேர்ந்த வெல்டிங் கைவினை கலைஞரான ஹேண்டி கெங் என்பவர், உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்துள்ளார். தனது வெல்டிங் திறன்களை பயன்படுத்தி, மின்சார காரை இயக்கும் திறன் கொண்ட பேட்டரி கொண்டு மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கியுள்ளார்.
இந்த பவர் பேங்க் மின்சார சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான 60 பவர் சாக்கெட்டுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த பவர் பேங்கை பயன்படுத்தி டிவி, மின்சார குக்கர், வாஷிங் மெஷின் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார் ஹேண்டி கெங்.
ஆச்சரியம் (Exciting)
மொபைல் போன்களுக்கு மட்டுமே இருந்து வந்த பவர் பேங்க், தற்போது அனைத்து வித பயன்பாட்டிற்கும் ஏற்றவாறு வடிவமைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. டெக்னாலஜி வளர வளர புதுப் புது கண்டுபிடிப்புகள் வருவதும் சகஜம் தான்.
மேலும் படிக்க
இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகிறது: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு!
Share your comments