திருமண விழாவின்போது, மணப்பெண் முகத்தில் கேக் தடவியதற்காக ஒரே நாளில் தாலி கட்டிய கணவனை மனைவி விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திருமணம் என்பது மணமக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். குறிப்பாக திருமணநாளில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் எதிர்கால சுவாரஸ்யத்திற்கு அடித்தளம் அமைக்கும். அத்தகையத் திருமண நாளை மணமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். ஏனெனில் அதுதான், இருவரும் சேர்ந்து தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவங்கும் முதல் நாள் என்பதால், இவ்வளவு முக்கியமான நாளாக பார்க்கப்படும். ஆனால் இந்த நாளே மணமக்கள் சேர்ந்து வாழும் கடைசி நாளாக மாறினால், அப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடந்துள்ளது.
கேக்கால் விவாகரத்து
திருமண விழாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைக் குறிப்பிட்டு திருமணமான அன்றே தன் கணவரை விவகாரத்து செய்த பெண் ஒருவர், சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். திருமண விழாவில் கேக் வெட்டுவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். இப்படியாக கேக் வெட்டும் போது மாப்பிள்ளை பெண் மீது கேக் அப்புவது என்பது நம்மூரில் கூட நடக்கும்.
அப்படித்தான் இங்கும் நடந்திருக்கிறது. அந்த பெண் தனது திருமண விழாவின் போது தன முகத்தில் கேக்கை பூச வேண்டாம் என தன் கணவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அதைக் கேட்காதக் கணவர் அனைவரது முன்னிலையிலும் திருமணமேடையில் கேக் வெட்டும் போது மனைவியின் பின்னங்கழுத்தை பிடித்து கேக் மீது முட்ட வைத்துள்ளார். இதனால் அவர் முகம் முழுவதும்கேக் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணப்பெண், அங்கிருந்து கோபமாகச் சென்றுவிட்டார்.
பின்னர் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக செல்லவில்லை இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கெல்லாம் விவாகரத்து என்று போனால், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நீதிமன்றங்களை உருவாக்க வேண்டிய நெருக்கடி, அரசுகளுக்கு ஏற்படும்.
மேலும் படிக்க...
திருமணம் நடுரோட்டில் நடந்தால் எப்படி இருக்கும்? நடந்துச்சே 90 ஜோடிகளுக்கு!
Share your comments