ஜப்பானியர்கள் நேரம் தவறாமைக்கு முன்னுதாரணமாக கூறப்படுபவர்கள். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் 10, 15 நிமிடங்களுக்கு முன்பாகவே அங்கு இருக்கும்படி திட்டமிடுபவர்கள். நேரம் தவறாமை என்பது அவர்களின் முக்கிய பழக்கமாகவே உள்ளது. இந்நிலையில், ஜப்பானின் ரயில் நிறுவனமான West Japan Railway Company ஓட்டுநர் ஒருவர் ரயிலை ஒரு நிமிடம் தாமதமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
அபராதம்
இதையடுத்து அந்த ரயில் ஓட்டுநருக்கு 56 யென் (இந்திய மதிப்பில் 36 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஓட்டுநர் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தாமதத்திற்கு காரணமாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில், ஒகயாமா நிலையத்திற்கு ஆளில்லாத ரயிலை இயக்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தவறான நடைமேடையில் நின்றிருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தால் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மனித தவறால் இந்த பிழை ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்ட மனுதாரர், அன்றைய தினம் பணிக்கு அவர் விடுப்பாக கருதப்படவில்லை என்றும் ரயில் அட்டவணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தாமதம் ஏற்படுத்திய ரயில் ஓட்டுநருக்கு முதலில் 85 யென் அபராதமாக விதிக்கப்பட்டது. எனினும் தொழிலாளர் நல அலுவலக தலையீடுக்கு பின்னர் அபராத தொகை குறைக்கப்பட்டது. எனினும், இந்த அபராத தொகையை செலுத்த ஓட்டுநர் மறுப்பு தெரிவித்தும் தனக்கு நஷ்ட ஈடாக 14 லட்ச ரூபாய் தர வேண்டுமெனவும் கோரி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments