108 என்ற எண்ணைக் கேட்டாலே நம்மில் பலருக்கு அலறும் சத்தத்துடன் வேகமாகச் செல்லுரும் சைரன் வைத்த ஆம்புலன்தான்.ஆனால் 108 என்ற எண்ணிற்கெனத் தனி மகத்துவம் உண்டு.
108 மந்திரங்கள் (108 Mantras)
வாழ்வின் அத்தனைத் தார்பரியங்களையும் உள்ளடக்கிய மந்திர எண்தான் இந்த 108. பெளத்தம், ஜைனம், சீக்கியம் என இந்திய கலாச்சாரங்கள் அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த எண் 108.
அதிலும் குறிப்பாக இந்திய மண்ணில் தோன்றிய அனைத்து கலாச்சாரங்களிலும் இந்த எண் முக்கியத்துவம் பெறுகிறது.
முழுமையைக் குறிக்கும் (Denoting completeness)
எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பதைக் கேட்டிருக்கலாம். 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும் எண்.
கடவுள் தன்மையைக் குறிக்கும் இந்த 108 என்ற எண் முழுமையைக் குறிக்கிறது. ஏன், ருத்ராட்ச மாலையில் 108 எண்ணிக்கை இருப்பதன் தாத்பர்யமே இதுதான்.
அதோபோல, எண் 9 முழுமையை குறிக்கும் எண். அதனால்தான் நவதானியம், நவமணிகள், நவராத்திரி என இந்திய கலாசாரத்தில் ஒன்பது என்ற எண்ணின் முக்கியத்துவத்தை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
கடவுள் நிலை (God position)
எண் 108இன் மூன்று இலக்கங்களையும் கூட்டினால் வருவது 9. 9 என்ற எண்ணுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் வரும் விடையைக் கூட்டிப்பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை, பிரபஞ்சத்தின் முழுமையை குறிக்கும் எண்.9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது. இதில் 9 என்ற எண்ணை12 என்ற ராசிகளின் மொத்த எண்ணால் பெருக்கினால் கிடைப்பது 108.
108ன் மகத்துவம் (The magnificence of 108)
அதேபோல, மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் 108 பாதங்கள் உண்டு. சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைப்பதற்கு என்றுக் கூறப்படுகிறது.
அதனால் தான் இந்தியக் கலாச்சாரத்தில் 108 என்ற எண் மகத்துவம் பெறுகிறது.
மேலும் படிக்க...
வருகை தரப்போகிறது சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்கள்
120 மொழிகளில் தொடர்ந்து பாடிய கேரள மாணவி: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!
Share your comments