Realme SmartTV On Flipkart
பிளிப்கார்ட்டில் மிகப் பெரிய தீபாவளி தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இந்த சேலில் சலுகையில் கிடைக்கின்றன.
ஐபோன், சாம்சங், சியோமி(IPhone, Samsung,Xiomi) போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட் டிவிகளும்(SmartTV) இதற்கு விதிவிலக்கல்ல. ஸ்மார்ட் டிவி-களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகள் உள்ளன. ஐபோன் 12(Iphone 12) விற்பனை அதிகம் உள்ளது. சேலில் மலிவாக கிடைப்பதால், ஐபோன் 12 மக்களின் முதல் தேர்வாக இருக்கின்றது.
இதுமட்டுள்ளுமல்லாமல் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளிலும் பெரிய தள்ளுபடிகள் உள்ளன. தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்க ஒரு நல்ல வாய்ப்புள்ளது.
ரியல்மி (Realme) 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அதை வெறும் 1,499 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம். இவ்வளவு குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வாங்குவது எப்படி என்று இங்கே காணலாம்.
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்- Offers and Discounts
ஸ்மார்ட் டிவி(SmartTV) வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. அதிக தேவை காரணமாக, ப்ளிப்கார்ட் அதில் மேலும் அதிகளவில் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
Realme இன் 32 இன்ச் டிவி ரூ.13,999-க்கு விற்பனையில் உள்ளது. ப்ளிப்கார்ட் டிவி-யில் 32% தள்ளுபடி அளிக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை இன்னும் குறைந்த விலையிலும் வாங்கலாம். வங்கி சலுகைகள் மற்றும் பரிவர்த்தனை சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவி-ஐ ரூ.1500 க்கும் குறைவான விலையில் வாங்க முடியும்.
ஸ்மார்ட் டிவியில் வங்கி சலுகைகள்- Banking offers on Smart TV
SBI கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால், 1500 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். அதாவது ஸ்மார்ட் டிவியின் விலை இப்போது ரூ.12,499 ஆகிவிடும். அதன் பிறகு 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் வழங்கப்படுகிறது.
பரிமாற்றச் சலுகையும் உண்டு-There is also a transfer offer
உங்கள் பழைய டிவியை பரிமாற்றம் செய்தால், 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய டிவியின் நிலை சீராகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் இந்த தள்ளுபடியை பெறலாம். இந்த அனைத்து சலுகைகளும் நீங்கள் பெற்றால் நீங்கள் Realme 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.1,499-க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க:
Share your comments