மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் , அரசு ஊழியர்களின் நீண்ட கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. எனவே அவர்கள் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் எல்லா மாநிலங்களிலுமே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஜார்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
அரசு ஊழியர்களுக்கு 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைத்தன.
தேசிய பென்சன் திட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்சன் திட்டம் (National Pension System) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இதில் எந்த சலுகைகளும் இல்லை என்பது அரசு ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்
இதனால், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், பிற மாநிலங்களின் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அமைச்சரவை ஒப்புதல்
இந்நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஜார்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற ஜார்கண்ட் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தனிக் குழு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக வளர்ச்சி ஆணையர் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் அடங்கிய தனிக் குழு அமைத்து ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க...
தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!
Share your comments