சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, அண்மைகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருவது, இல்லத்தரசிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமையல் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மிக உயர்வாக இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது.
மறு ஆய்வு
இந்நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரவு
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்டுள்ள தகவல்படி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றலாமா என்பது குறித்து மறு ஆய்வு செய்யும்படி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
இந்தக் குழு தனது பரிந்துரைகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்படுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை. எனவே, குழுவின் பரிந்துரை சாதகமாக இருந்தாலும் அமலுக்கு வர சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...
Share your comments