கேரளாவில் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த திருடனை, மொபைல் போனில் உள்ள வசதியை பயன்படுத்தி, போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு குவிகிறது. கேரளாவில் மாநிலம் கன்னுார் மாவட்டம் பாலா நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வயதான பெற்றோர், கோட்டயம் மாவட்டம் கீழுரில் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தன் மொபைல் போனில் பார்க்கும் தொழில்நுட்பத்தை அந்தப் பெண் இணைத்துள்ளார்.
கண்காணிப்பு கேமரா (Camera)
நேற்று முன்தினம் இரவு தன் பெற்றோரின் வீட்டு மாடிப்படியில் மர்ம நபர் ஒருவர் ஏறிச் செல்வதை மொபைலில் இணைத்துள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த மகள் அதிர்ச்சியடைந்தார். இது பற்றி பெற்றோர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவரை மொபைலில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
பாராட்டு
போலீசார் வருவதைப் பார்த்த திருடன் மாடியில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். வயதானவர்கள் தனியாக இருப்பதை அறிந்து வீட்டு கதவை உடைத்து திருட அந்த நபர் முயற்சித்தது விசாரணையில் தெரிந்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
மேலும் படிக்க
365 வகை உணவுகள்: வருங்கால மாப்பிள்ளைக்கு விருந்து!
10 ரூபாய்க் கடன்: 11 ஆண்டுகளுக்குப் பின் வட்டியுடன் அடைப்பு!
Share your comments