இந்தியாவில் வரி செலுத்தும் அனைவரும் அவரவரின் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என பலமுறைக் கூறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறிய வரி செலுத்துவோர் ஜூன், 30, 2022 வரை ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதன் பிறகு பான்-ஆதார் இணைப்புக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன் ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் - பான் இணைப்பு (Aadhar - Pan Link)
தகவல் தொழில்நுட்பத் துறை சமீபத்திய ட்வீட்டில்இதுவரை வரி செலுத்துவோர் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால், அவர்களின் பான் கார்டு செயலிழந்து விடாமல் தடுக்க, ஏப்ரல் 1, 2023க்கு முன் அதைச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் 1961 இன் வருமான வரி (IT) சட்டத்தின்படி, விலக்கு வகைக்குள் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களுக்கும் மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் உள்ளது, அதன் பிறகு ஏப்ரல் 1, 2023 முதல் தங்களது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லுபடியாகாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ”அனைத்து பான் வைத்திருப்பவர்களும், 11 மே, 2017 தேதியிட்ட அறிவிப்புகள் எண். 37/2017 இன் படி விலக்கு வகையின் கீழ் வராதவர்கள் மற்றும் இதுவரை தங்கள் ஆதாரை பான் உடன் இணைக்காதவர்கள், உடனடியாகச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். www.incometax.gov.in இல் ரூ. 1,000 கட்டணத்தைச் செலுத்திய பிறகு, சரியான ஆதாருடன் பான் எண்ணை இணைக்க முடியும் எனவும்” தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
புதிய ரேஷன் அட்டை வாங்க எங்கும் அலைய வேண்டாம்: இதை செய்யுங்கள் போதும்!
சிலிண்டர் விலை முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments