தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (Tamil Nadu Corporation for Development of Women) சார்பில், 'மின்மதி' செயலி (APP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநில ஊரக மகளிர் சுய உதவு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் பெண்களுக்கு சுய தொழில் செய்யும் வகையில் சுழல் நிதி வழங்கல், வங்கிகள் மூலம் கடனுதவி உள்ளிட்ட திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறியும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 'மின்மதி' (Minmathi)செல்லிடைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மின்மதி செயலியில் இருக்கும் தகவல்கள்
-
இதன் மூலம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, கொரோனா குறித்த தகவல்கள்
-
சுயதொழில் குறித்த பயிற்சிகள், அன்றாட முக்கிய செய்திகள்
-
வங்கிக்கடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்திறன் பயிற்சி
-
அலுவலகம் மற்றும் திருமண அரங்குகளில் அழகான செடிகள் வளா்க்கும் பயிற்சி
-
சிறுதானியங்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக தயாரிக்கும் முறை
-
இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் அமைத்தல், கால்நடை வளர்ப்பு, சிறுதானிய பயன்பாடு அழகு குறிப்புகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயனுள்ள செய்திகளையும் அந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் இயங்கும், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் வடிவமைத்துள்ள இந்த 'மின்மதி' செயலி கூகுள் பிளே ஸ்டோரில் (Google play store) கிடைக்கிறது. ஆன்டிராய்டு மொபைல் போனில் (Androide mobile phone)பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
Share your comments