1. மற்றவை

TNPSC Exam- அரை மணி நேரத்திற்கு முன் வராவிட்டால் தேர்வு எழுத முடியாது!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
TNPSC Exam- Can't write the exam if you don't arrive before half an hour!

TNPSC குரூப் 2 தேர்வு எழுத வருபவர்கள், தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, வராவிட்டால் தேர்வு எழுத முடியாது. எனவே விண்ணப்பித்திருப்போர் இதற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தைத் தயார் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும், தேர்வில் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு அறைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும், தேர்வில் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி குரூப் 2 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தேர்வு 9.30 மணி முதல் 12.30 மணி வரை என 3 மணி நேரம் நடைபெறும். 8.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வுக் கூட அறைக்கு வர வேண்டும்.

அனுமதி கிடையாது (Not allowed)

9 மணிக்குப் பிறகு, அதாவது 8.59க்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 11,78,175 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வுக்கான வழிமுறைகள் (Instructions for selection)

  • முதலில் தேர்வர்கள் பாசிட்டிவ் ஆன மனநிலையில் தேர்வறைக்குச் செல்ல வேண்டும்.

  • தேர்வுக்கு தேவையான ஹால்டிக்கெட், பேனா உள்ளிட்ட பொருட்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • தேர்வர்கள் இது முதல்நிலை தேர்வு என்பதால், எத்தனை வினாக்களுக்கு விடையளித்தல் நமக்கு நல்லது முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

  • மேலும் உங்களுக்கு தெரிந்த வினாக்களாக இருந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முயற்சிக்கலாம்.

  • தேர்வு கூடத்திற்கு முடிந்தவரை 8 மணியிலிருந்து 8.30 மணிக்குள் செல்வதுபோல் தயாராகிக் கொள்ளுங்கள்.

  • ஏனெனில் 9 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

  • எனவே கஷ்டப்பட்டு, ஒரு சில வருடங்களாக படித்து வந்த நிலையில், அது வீணாகாமலும், அடுத்த தேர்வுகளுக்கு காத்திருப்பதைத் தடுக்கவும், தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள்.

  • அடுத்ததாக ஓ.எம்.ஆர் தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுன், அது உங்களுக்கு உரியது தானா என நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

  • ஏனெனில் ஓ.எம்.ஆர் மாறியிருந்தால், உங்கள் விடைத்தாள் நிராகரிக்கப்படவோ அல்லது மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவோ வாய்ப்புள்ளது.

  • பின்னர் ஓ.எம்.ஆர் படிவத்தில் தேவையான விவரங்களை கவனமுடன் நிரப்புங்கள்.

  • தேவைப்படுபவர்கள் கைக்கடிகாரம் அணிந்து செல்லலாம். தேர்வறையில் மேற்பார்வையாளர்கள் உங்களுக்கு நேரம் குறித்த தகவல்களை வழங்கலாம். இருப்பினும் தேவைப்படுபவர்கள் அணிந்து செல்லலாம்.

  • ஆனால் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சாதாரண வாட்ச்களை அணிந்து செல்லுங்கள்.

மேலும் படிக்க...

எகிறும் EMI - எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

சம்பளமாகத் தங்கம்- திடீர் முடிவு!

English Summary: TNPSC Exam- Can't write the exam if you don't arrive before half an hour! Published on: 19 May 2022, 10:12 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.