ஜவுளித் துறையில் புதுமை படைக்கிறது 'ஸ்மார்ட் டெக்ஸ்டைல்ஸ்' தொழில்நுட்பம். துணியைப் போலவே நெய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் மின்னணு கருவிகள் தான் இவை. அண்மையில், பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் 46 அங்குல 'ஸ்மார்ட் டெக்ஸ்டைல்' துணியை வடிவமைத்துள்ளர்.
இதில் மிக நுண்ணிய எல்.இ,டி., விளக்குகள் (LED Lights), உணரிகள் மற்றும் மின்னாற்றல் சேமிப்பான்கள் போன்றவற்றை இழையோடு சேர்த்து நெய்து சாதனை படைத்துள்ளனர்.
எல்.இ,டி., விளக்குகள் (LED Lights)
இந்த துணி ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் ரகம் அல்ல. இதிலுள்ள எல்.இ.டி., விளக்குகள் நுாலிழை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பலவகை இழைவடிவிலான உணரிகள் மூலம் ஒளியை உமிழ வைக்க முடியும்.
எனவே இந்த துணியை வழக்கமான துணி போலவே நெய்யவும், கையாளவும் முடியும். இதை வைத்து விளம்பர பதாகைகளை, நடைபாதையில் 'தி பட்டால் ஒளிரும் கால்மிதி, திரைச் சீலை' என்று பல விதங்களில் பயன்படுத்த முடியும் என கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
இன்று Twosday: 22-02-2022 ஐ கொண்டாடிய உலக மக்கள்!
இ-நாம் திட்டத்தால் நெல் வரத்து அதிகரிப்பு: விவசாயிகளுக்கும் கூடுதல் பலன்!
Share your comments