1. மற்றவை

திருமணம் முடிந்தவுடன் கல்லறைக்குப் பயணம்- திகில் தம்பதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Travel to the grave after marriage- Horror couple!
Credit : Dailythanthi

பொதுவாகத் திருமணம் என்றாலே 10 அல்லது 15 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, குளு குளுப் பிரதேசங்களுக்குத் தேனிலவு செல்வது வழக்கம்.

அசத்தல் தம்பதி (Stunning couple)

ஆனால், திருமணமான மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்குச் சென்ற இந்தத் புதுமணத்தம்பதி, ஒரே நாளில் 15 பேரை தகனம் செய்து மற்றவர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தனர்.

இந்த ஜோடியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உண்மை என்னவெனில், கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இருவரும் சேர்ந்து மயானத்தில் செய்தனர்.

மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான், கடந்த வாரம் நூர் அஃபிஃபா ஹபீப் என்பவரைத் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும் கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர்.

தேனிலவுக்கு பதிலாகக் கல்லறை (Grave instead of honeymoon)

திருமணமான முதல் வாரத்தில் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளைச் செய்வது என ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். தேனிலவுக்கு பதிலாக கல்லறையில் கழிக்கும் இந்த முடிவை மக்கள் பாராட்டி வருகின்றனர். மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார்,

திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.

மனம் ஒத்த தம்பதி

இதை அவர் தனது மனைவியிடம் கூறினார், அதன் பிறகு அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர், அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.

சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை, இந்தத் தம்பதி தகனம் செய்தது. இவர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தாலும், சமூக சேவைக்காக இந்த குழுவிற்கு உதவுகிறார்கள்.

அதே நேரத்தில், இந்த குழுவுக்கான தங்கள் பணி இப்போதைக்கு நிற்கப் போவதில்லை என்று தம்பதியினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்!

ஒமிக்ரான் பாதிப்பால் இங்கிலாந்தில் முதல் உயிரிழப்பு!

English Summary: Travel to the grave after marriage- Horror couple! Published on: 19 December 2021, 09:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.