1. மற்றவை

இரண்டு சிலிண்டர் இலவசம்- இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Two cylinders free- a pleasant surprise for housewives!

பொதுவாக பட்ஜெட்டில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கம். அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதுபோன்ற அறிவிப்புகள் இல்லாதது மக்களை ஏமாற்றம் அடையச் செய்திருந்தது.

இந்நிலையில், குஜராத் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள சிலிண்டர் குறித்த அறிவிப்பு இல்லத்தரசிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அப்படியென்ன அறிவிப்பு தெரியுமா?  உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று குஜராத் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல்

2023-24 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை குஜராத் மாநில நிதியமைச்சர் கனு தேசாய் சட்டசபையில் தாக்கல் செய்தார். இது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய பாஜக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

 இலவச சிலிண்டர்

இந்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றில் சில பாஜக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் ஆகும்.அதில் மிக முக்கியமாக இலவச சிலிண்டர் குறித்த அறிவிப்பு வெளியானது.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

காப்பீட்டு வரம்பு ரூ.10 லட்சம்!

பட்ஜெட் தாக்கலின் போது, ​​தகுதியான குடும்பங்களுக்கு பிரதமரின் ஜன் ஆரோக்கிய-மா அமிர்தம் யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டு காப்பீட்டு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டுக்கான மதிப்பீடுகள் ரூ.916.87 கோடி உபரியாக இருப்பதாக நிதியமைச்சர் தேசாய் தெரிவித்தார்.

 மேலும் படிக்க…

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் சிவன்!

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000!- விபரம் உள்ளே

English Summary: Two cylinders free- a pleasant surprise for housewives! Published on: 26 February 2023, 10:48 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.