சர்வதேச சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆராய்ந்தால், இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலை கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் மட்டுமல்ல, பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உடனடியாக சமையல் எண்ணெயின் விலையையும் பாதிக்கும்.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.5 மில்லியன் டன்கள் (மெட்ரிக்) சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இதில், சோயாபீன் கடுகு ஆகியவற்றிற்குப் பிறகு 4-வதாக அதிகளவில் பயன்படுத்தப்படுவது, சமையல் எண்ணெய் ஆகும்.இந்தியா 50,000 டன் சூரியகாந்தி எண்ணெயை சொந்த நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவற்றை பெரும்பாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து, இறக்குமதி செய்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ள கருங்கடல் துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 200,000 டன்களை இறக்குமதி செய்கிறோம். அந்த முழு வர்த்தகமும் இப்போது சீர்குலைந்துள்ளது.
ரஷ்யாவின் போர் அறிவிப்பிற்கு முன்பே உலக அளவில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.பிப்ரவரி 23ம் தேதி, மும்பையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெயின் விலை (செலவு மற்றும் காப்பீடு மற்றும் சரக்கு) ஒரு டன்னுக்கு $1,630 ஆக இருந்தது.
இது ஒரு மாதத்திற்கு முன்பு $1,455 மற்றும் ஒரு வருடத்திற்கு முன்பு $1,400 ஆக இருந்தது.
இதனிடையே கச்சா எண்ணெய் விலை’ பீப்பாய்க்கு $100ஐத் தாண்டியதால், பயோ-டீசல் உற்பத்திக்காக’ பனை மற்றும் சோயாபீன் எண்ணெயைத் திருப்புவது மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறுகிறது.இவை அனைத்திற்கும் சாதகமான அம்சம் என்னவென்றால், மார்ச் நடுப்பகுதியில் இருந்து அறுவடை செய்யப்படுவதால், இந்திய விவசாயிகள் தங்கள் கடுகு பயிருக்கு நல்ல விலையைப் பெறுவார்கள்.
கடுகு தற்போது ராஜஸ்தானின் மண்டிகளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,700-6,800க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, இது அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.5,050ஐ விட அதிகமாகும். விலை உயர்வால்’ வரும் காரிஃப் பருவத்தில் நிலக்கடலை, சோயாபீன் மற்றும் எள் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் மேறகொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க...
மஹாசிவராத்திரி விழா - ஈஷாவில் கோலாகலக் கொண்டாட்டம்!
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!
Share your comments