1. மற்றவை

தொப்பை ஆண்கள்தான் அழகு - விரும்பும் இளம்பெண்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Want a belly groom - young ladies lined up!

இந்த ஊரில் தொப்பை உள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்ளவே, நிறையப் பெண்கள் விரும்புகின்றனர். அதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்கள், வரிசைகட்டியும் நிற்கத் தயாராக இருக்கிறார்கள்.

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவர். இதற்காகத்தான் ஆண்கள் குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஜிம்மிற்குச் சென்று தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி வைத்துக்கொள்கின்றனர். ஆனால் ஆப்பிரக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் நடக்கும் கதையே வேறு. ஏனெனில், அங்குள்ள மக்களைப் பொறுத்தவரை, தொப்பை உள்ள ஆண்கள் தான் அழகானவர்கள் என நம்புகிறார்கள்.

நம்மூரில் அழகான ஆண்கள் என்றால் அவர்களுக்கு என சில அடையாளங்கள் சொல்லப்படுகிறது. அந்நாட்டில் போடி என்ற பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். . இவர்கள் இன்றும் நாகரீகம் அடையாமல் காட்டுப்பகுதியிலேயே காட்டு வாசிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களிடம் ஒரு விநோதமான பழக்கம் ஒன்று இருக்கிறது.

அதாவது இந்த பழங்குடியில் உள்ள ஆண்கள் தொப்பையுடன் இருந்தால் தான் அழகானவர்கள் எனக் கூறுகிறாக்ரள்.. அதனால் இந்த பகுதியில் உள்ள திருமணமாகாத ஆண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொப்பை போட்டி நடக்குமாம்.

இதற்காக இந்த போட்டி நடப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அந்த பழங்குடியின திருமணமாகாத ஆண்கள் இதற்கு தயாராக துவங்கிவிடுவார்களாம். இதற்காக தினமும் 2 லிட்டர் பசும் பாலை பசு ரத்தத்துடன் கலந்து குடித்து வருகின்றனர்.

போட்டி நடக்கும் நாள் அன்று ஆண்கள் எல்லாம் தங்கள் தொப்பையை காண்பிக்க வேண்டுமாம். பெரிய தொப்பை உள்ள நபர்கள் வெற்றி பெருவார்களாம். இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களைத் திருமணம் செய்து கொள்ள அங்குள்ள பெண்கள் வரிசை கட்டி நிற்பார்களாம்.

மேலும் படிக்க...

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

சளியைத் துவம்சம் செய்யும் கற்பூர வல்லி- வீட்டில் வளர்ப்பதும் சுலபம்!

English Summary: Want a belly groom - young ladies lined up!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.