பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம் யுவிகா என்ற பெயரில் கடந்த, 2019ம் ஆண்டு இஸ்ரோவால் அறிமுகம் செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சிகள் நடத்தப்படும். அதோடு மட்டுமில்லாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் உடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயிற்சிக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மூன்று அல்லது நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு மொத்தம், 150 மாணவர்கள் அழைக்கப்படுவர்.
யுவிகா பயிற்சி முகாம் (Yuvika Training Center)
கொரோனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனோ தாக்கம் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டில், யுவிகா பயிற்சி முகாம் நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இஸ்ரோவின் நான்கு மையங்களில் மே 16 முதல் 28ம் தேதி வரை பயிற்சி முகாம் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது துவங்கியுள்ளது. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க (Apply)
விருப்பமுள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்படும். இதர விபரங்களுக்கு 87782 01926 எண்ணை அழைக்கலாம், என கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவ மாணவியர்களே, இஸ்ரோ அளித்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாது, கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் இஸ்ரோவின் இந்தப் பயிற்சி நாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
மேலும் படிக்க
சென்னை ஐஐடி-க்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்!
வேளாண்மை விற்பனை வாரியத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பிகவும்!
Share your comments